நற்பிட்டிமுனை தாஹிர் ஜெஸான் !! கல்முனையில் முதல் பெண் இலங்கை நிருவாக சேவை அதிகாரியானார்.
நற்பிட்டிமுனை கிராமத்தைச் சேர்ந்த தாஹிர் ஜெஸான் 2017 இல் நடை பெற்ற இலங்கை நிருவாக சேவை தரம் 3 போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று நேர்முகத் தேர்விலும் தெரிவாகி அகில இலங்கை ரீதியில் 55வது இடத்தைப் பெற்று நிருவாக சேவை அதிகாரியானார்.
இவர் நாளை 2019-03-05ஆம் திகதி கொழும்பில் உள்ள இலங்கை அரச நிருவாக நிறுவனத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் இவருக்கான நியமனத்தைப் பெற்று ஒரு வருட பயிற்சிக்குச் செல்லவுள்ளார்.
1990.01.26ஆம் திகதி நற்பிட்டிமுனை கிராமத்தில் பிறந்த இவர் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் உயர்தரம் வரை கற்று பல்கலைக் கழகத்திற்குத் தெரிவானார். இலங்கை மொறட்டுவை பல்கலைக்கழத்தில் வணிகத்துறை பீடத்தில் கற்று பட்டணமும் நாடும் பல்வகைத் திட்டமிடல் பட்டதாரியாகி நகர அபிவிருத்தி அதிகார சபையில் பணியாற்றினார்
அதன் பின்னர் அப் பதவியை விட்டு விலகி 2017ஆம் ஆண்டு முகாமைத்துவ உதவியாளர் நியமனத்தைப் பெற்று கல்முனை பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றிய நிலையிலேயே இலங்கை நிருவாக சேவை அதிகாரியானார்.
இவர் நற்பிட்டிமுனை கிராமத்தைச் சேர்ந்த தாஹிர் ஜெமீலா தம்பதியின் புதல்வியும் சம்மாந்துறை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஆஷிக்கின் துணைவியுமாவார். நாடறிந்த எழுத்தாளரும் கவிஞரும் நற்பிட்டிமுனை கிராமத்தின் முதலாவது நிருவாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம்.பளீல் ஜஸானின் சிறிய தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கல்முனை பிரதேசத்தில் முதல் பெண் நிருவாக சேவை அதிகாரியான இவரை பாராட்டி கெரளவித்த நிகழ்வு நேற்று நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேஸன் ஏற்பாட்டில் நடை பெற்றது.
அல்-கரீம் பவுண்டேஸன் தலைவர் சீ.எம்.ஹலீம் தலைமையில் நடை பெற்ற இந்த கௌரவிப்பு நிகழ்வில் நற்பிட்டிமுனை உலமா சபை தலைவரும் கல்முனை அல்-ஹாமியா அரபுக் கல்லூரி அதிபருமான மௌலவி யூ.எல்.ஏ.கபூர், நற்பிட்டிமுனை ஜூம்மாப்பள்ளிவாசல் தலைவர் மௌலவி ஜே.றிஸான், கல்முனை மாநகர சபை உறுப்பினர் சீ.எம்.முபீத், கிழக்குமாகாண கால் நடை அபிவிருத்தி திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.சீ.எம். ஜுனைட் , கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சலை தர நிர்ணய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹீர் உட்பட அதிபர்கள், பள்ளிவால் நிருவாகிகள் ஊர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு நிருவாக சேவை அதிகாரியாக நியமனம் பெற்ற தாஹிர் ஜெஸானை “சாதனை மங்கை “ பட்டம் வழங்கி பாராட்டி கௌரவித்தனர்
Comments
Post a Comment