பாண்டிருப்பு 01சீ மாதர் அபிவிருத்தி சங்கம் அம்பாறை மாவட்டத்தில் முன்னிலையில்
அம்பாறை மாவட்டத்தில் உள்ள 20 பிரதேச செயலகங்களுக்குள் கல்முனை பாண்டிருப்பு 01சீ மாதர் அபிவிருத்தி சங்கம் சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறது. கடந்த பன்னிரண்டு வருடங்களாக சிறந்த கட்டமைப்புடன் செயற்பட்டுவரும் இம்மாதர் சங்கம் எதிர்காலத்திலும் சிறப்பாக இயங்கும் என்பதில் சந்தேகம் இல்லை . பிரதேச கல்வியை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த சங்கமானது சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்காக கற்றல் உபகரணங்களை வழங்கி வைப்பது பாராட்டுக்குரியது . எதிர்காலத்தில் இந்த சங்கத்தின் வளர்ச்சிக்கு கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகம் கிராம அபிவிருத்தி திணைக்களத்தினூடாக முடியுமான அத்தனை உதவிகளையும் வழங்கும் என உதவி பிரதேச செயலாளர் ஜெ.அதிசயராஜ் தெரிவித்தார் .
கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பாண்டிருப் பு 1சீ மாதர் அபிவிருத்தி சங்கத்தின் 12ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று (03) பாண்டிருப்பு பல் தேவைக்கட்டிடத்தில் சங்கத்தின் செயலாளர் எஸ்.நித்திய கைலேஸ்வரி தலைமையில் நடை பெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை உதவி பிரதேச செயலாளர் அங்கு உரையாற்றும் போதே மேற்கண்ட விடயங்களை தெரிவித்தார் .
நிகழ்வில் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ரீ.ஏ.நஹீப் , கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் யோகேஸ் வசந்தி ,பிரிவுக்கான கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் கிராம அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் ,பாண்டிருப்பு 1சீ மாதர் அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர் .
நிகழ்வில் அதிதிகளால் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன
Comments
Post a Comment