ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவுக்கும் இடையிலான சந்திப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினரே ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பையடுத்து ராஜாங்க அமைச்சு ஒன்றும் ,பிரதி அமைச்சு ஒன்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைத்துள்ளது . இதில் சுகாதார ராஜாங்க அமைச்சராக ஹசனலியும் , போக்குவரத்து பிரதி அமைச்சராக தௌபீக்கும் நியமனம் செய்யப் படவுள்ளதாக கூறப் படுகின்றது. இதே வேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அமீரலிக்கு வீடமைப்பு மற்றும் சமுர்தி பிரதி அமைச்சர் பதவி வழங்கப் படவுள்ளதாக அறிய முடிகின்றது .
Comments
Post a Comment