கல்முனை தமிழ் மக்களுக்கு சுய தொழிலுக்கான உதவி
கிழக்கு மாகாண சமுக சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் எம்.ராஜேஸ்வரன் கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு சுய தொழிலுக்கான உபகரணங்களும் , நிதி கையளிக்கும் நிகழ்வும் இன்று கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் எம்.ராஜேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உபகரணங்களையும் , நிதியையும் வழங்கி வைத்தார் .
Comments
Post a Comment