தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர்!குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறார்
அண்மையில் சில உள்ளூர் சமூக இணையத்தளங்களில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும், உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களைத் தொடர்புபடுத்தியும் வெளிவந்த செய்திகள் தொடர்பாக, தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தரை தொடர்பு கொண்டு கேட்டோம்.
சில உள்ளூர் இணையத்தளங்களில் வெளிவந்துள்ள குறித்த குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரித்த உபவேந்தர், குறித்த இணையத்தளங்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்றும், இவைகளால் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் சார்ந்த உயரதிகாரிகள் விளக்கம் கோரும் பட்சத்தில் அவர்களுக்கு ஒத்துழைப்பும் உதவியும் புரிவதற்கு தயாராய் இருப்பதாகவும், எந்தக்குற்றச்சாட்டுக்களுக்கும் முகம்கொடுக்கவும் தன்னால் முடியும் என்றும் தெரிவித்தார்.
Comments
Post a Comment