காலி துறைமுகத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதக்கப்பல் சட்ட ரீதியானதே என பாதுகாப்புச் செயலாளர் யூ.டி.பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.


காலி முறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த மஹநுவர என்ற கப்பலில் பெருந்தொகையான துப்பாக்கிகளும் தோட்டாக்களும் மீட்கப்பட்டிருந்தன.  சட்ட விரோதமான முறையில் ஆயுதங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டு வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எனினும் இந்த ஆயுதக் களஞ்சியம் அடங்கிய கப்பல் சட்ட ரீதியானது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்தக் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 3000 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் மற்றும் லட்சக்கணக்கான தோட்டாக்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமானவை என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். காலி துறைமுகத்திலிருந்து ஏழு கடல் மைல் தொலைவில்  இந்த கப்பல் நங்கூரமிடப்பட்டிருந்தது. சோமாலிய கடற் கொள்ளையர்களிடமிருந்து கப்பல்களை பாதுகாக்கும் பணிகளுக்காக இந்தக் கப்பல் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 
இந்தக் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பற்றிய விபரங்கள் பாதுகாப்பு அமைச்சின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே இந்த ஆயுதக் களஞ்சியம் அடங்கிய கப்பல் சட்ட விரோதமான முறையில் நங்கூரமிடப்பட்டிருக்கவில்லை என பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்