தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளராக சுஹைர் நியமனம்
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் ஜனாதிபதி மைதிரியினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்
இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைருக்கு இன்று மாலை கையளிக்கப்பட்டது. பதவி வழியாக ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபயகோன் தவிசாளராக இந்த ஆணைக்குழுவின் தலைவராக செயற்படுகின்ற நிலையில் இதன் பணிப்பாளர் நாயகமாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எம்.எம்.சுஹைர், ஈரானுக்கான இலங்கை தூதுவராக கடமையாற்றியதுடன் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபகத்தின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார் .
Comments
Post a Comment