மேலும் 6 அமைச்சர்கள் இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
ஜனாதிபதியின் முன்னிலையில் இன்று இவர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
மொஹமட் ஹலீம் மொஹமட் ஹாசிம் முஸ்லிம் மதவிவகார மற்றும் அஞ்சல்துறை அமைச்சரவை அமைச்சராகவும் சுகாதார ராஜாங்க அமைச்சராக ஹசன் அலியும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
இதனை தவிர ரஞ்சன் ராமநாயக்க சமூக சேவைகள் பிரதியமைச்சராகவும் வசந்த அலுவிஹார மகாவலி அபிவிருத்தி பிரதியமைச்சராகவும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
வீடமைப்புத்துறை மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சராக அமீர் அலியும் உள்ளக போக்குவரத்த்துறை அமைச்சராக மொஹமட் சரீப் தௌபீக்கும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
Comments
Post a Comment