கல்முனை மண்ணுக்கு சதி நடந்து விட்டது!அமைச்சுப் பதவியில் புறக்கணிக்கப்பட்ட மாமனிதா் அஷ்ரஃபின் தாயகம் !!

எம்.இம்ராஸ் 


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒரு ராஜாங்க அமைச்சும் இன்னுமொரு பிரதியமைச்சும் வழங்கப்பட்டுள்ளன. எனது இந்த வியூகம் மெய்ப்பிக்கப்பட்டு விட்டது. என்றாலும் ஒரு விடயம் பிழைத்து விட்டதுதான். நாடாளுமன்ற உறுப்பினர்களான தௌபீக், ஹரீஸ் ஆகியோருக்கே இவை கிடைக்குமென நான் நினைத்தேன். ஆனால் ஹஸன் அலிக்கு ராஜாங்க அமைச்சு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தௌபீக், ஹரீஸ் ஆகியோரையே ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களாக நியமிப்பதற்கு கடைசி வரை தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், சிலர் காரியத்தில் அப்பர்களாகச் செயற்பட்டதால் ஹரிஸின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது
ஹரீஸுக்கு பதவி வழங்குவதன் மூலம் தனது எதிர்கால அரசியல் இருப்பில் ஏற்படக் கூடிய தளர்வு நிலைமைகளை கருத்தில் கொண்டே ஒரு குட்டித் தலைமை காய் நகர்த்தியுள்ளது. கல்முனையிலிருந்து அவசரமாக கொழும்பு வந்து இந்த விடயத்தில் தனது காரியத்தைச் சாதித்து விட்டது.

இவ்வாறு மூத்த ஊடகவியலாளர் சித்திக் காரியப்பர் பதிவிட்டுள்ளார். ஊடகவியலாளர் சித்திக் காரியப்பர் செய்திகளை வெளியிடுவதில் நடுநிலைத்தன்மையை பேணுகின்ற ஒருவர். அந்த வகையில் கல்முனை நகரத்திற்கு பிரதி அமைச்சுப் பதவி கிடைக்காமல் போனதற்கு சிலரின் சூழ்ச்சிதான் காரணம் என்பது வெளிப்பட்டுள்ளது.

கல்முனை சாய்ந்தமருது அரசியல் பிரதிநிதிகளே ஆகியோர்கள்தான் பிரதி அமைச்சுப் பதவி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீசுக்கு கிடைக்கவிடாமல் சூழ்ச்சி செய்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது
தங்களது அரசியல் இருப்புக்கு பாதகமாக வந்துவிடும் என்பதற்காக கல்முனை மண்ணுக்கு கிடைக்கவேண்டிய பிரதி அமைச்சுப் பதவியை மிகவும் பிரயத்தனம் செய்துதான் இல்லாமலாக்கியுள்ளனர். இவர்கள் கட்சியின் உறுப்பினர்கள் பலருக்கும் அழுத்தங்களைக் கொடுத்ததுடன் ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்களையும் சந்தித்து தங்களது சூழ்ச்சியை அரங்கேற்றியுள்ளனர்.
பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபின் தாயகமான கல்முனை மாநகரம் அவரது மறைவிற்குப்ப பிறகு அரசியல் அதிகாரம் இல்லாமல் அபிவிருத்தியில் பின்தங்கிக் காணப்படுகின்றது. கடந்த 15 வருடங்களாக கல்முனை நகரத்திற்கு மத்திய அரசாங்கத்தில் அமைச்சுப்ப தவியோ அல்லது மாகாண அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியோ இல்லாமல் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு விடப்பட்டுள்ளனர்.

முஸ்லிம்களின் முகவெற்றிலையாகப் பார்க்கப்படுகின்ற கல்முனை மாநகரத்தை சின்னாபின்னாமாக்கி அதனை அழித்துவிடுவதே இன்று சிலரின் எண்ணமாக உள்ளது. இன்று சிறிய கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவும், இருதமாகவும் உள்ள கல்முனை மாநகரத்திற்கு அந்தப் பதவியை வழங்க முடியாதது ஒரு துரதிர்ஸ்டம்தான்.

ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனவுக்கு ஆகக்கூடுதலான 90 சதவீதமான வாக்குகளை அளித்த பிரதேசம் கல்முனையாகும். அந்த மக்கள் முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டை தங்களது எண்ணமாகக் கொண்டு வாக்களித்துள்ளனர். அவ்வாறு வாக்களித்த மக்களுக்கு கட்சி செய்த பரிசுதான் அமைச்சுப் பதவி புறக்கணிப்பாகும்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரை கூடுதலான சதவீதமான வாக்குகளை அளிக்கின்ற நகரம் கல்முனையாகும். பல்வேறு சமூகப் பிரச்சினைகளையும் களத்தில் எதிர்கொண்டு மக்களுக்காக பணிபுரிகின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் பிரதி அமைச்சுப் பதவி பெறுவதற்கு முழுத்தகுதியுடையவர்.
இன்று அரசியல் வஞ்ஞகம் கொண்ட சிலர்அரசியல் பித்தலாட்டம் செய்து கல்முனை மண்ணுக்குரிய அரசியல் அதிகாரத்தை இல்லாமல் செய்துள்ளனர்.
கட்நத 15 வருடங்களாக அமைச்சு அதிகாரம் இல்லாத கல்முனைக்கு மேலும் 5 வருங்ட்கள் இல்லை என்ற நிலையை இந்த சூழ்ச்சிக்காரர்கள் ஏற்படுத்தியுள்ளனர். முஸ்லிம்களின் தலைநகரமாக கல்முனையை இல்லாமல் செய்வதற்கு பலரின் நீண்டகால ஆசைக்கு கல்முனை சாய்ந்தமருது அரசியல் பிரதிநிதிகள் துணைபோய்விட்டனர்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்தான் முதலமைச்சராக வரவேண்டும் என்று கட்சித் தலைவர் ஹக்கீமுக்கு சவால்விட்டு பிரதேசவாதங்களை கிழப்பி கட்சியை பிழையான வழிக்கு இட்டுச் சென்ற சட்டத்தரணி இன்று அதற்கு ஒரு படிமேல் சென்று சாய்ந்தமருது அரசியல் பிரதிநிதியையும் துணைக்கு அழைத்து சூழ்ச்சிக்காரர் என்ற பெயரை சம்பாதித்துள்ளார்.

கல்முனை மாநாகரம் அரசியல் அதிகாரம் இன்றி அந்த மக்கள் மிகுந்த கவலையுடன் காணப்படுகின்றனர். கல்முனை மக்களுக்கான பிரதி அமைச்சுப் பதவியை தங்களது சூழ்ச்சி மூலம் தடுத்த இந்த இருவரின் முகத்திரைகளை கிழிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர். பணம்தான் வாழ்க்கை என்று அலைபவர்களுக்கு சமூகமும், மண்ணும் எங்கு விளங்கப் போகின்றது. கிடைத்த பதவியைக் கூட செய்ய முடியாமல் காட்டிக் கொடுப்புக்கு மட்டும் துணைபோகின்றனர்.
சிலர் நாட்டைக் காட்டிக் கொடுத்தாவது பணம் சம்பாதிக்க முற்படுவார்கள். பணத்தைக் காட்டினால் எல்லாம் மறந்தே போகும். 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்