மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம்
ஸ்டாசொலிடர்டி பவுண்டேசன் அமைப்பின் ஏற்பாட்டில் அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மா வட்டத்தில் ஒரு பகுதியான தாழங்குடா முதியோர் சங்க உரறுப்பினர்களுக்கான நிவாரணம் வழங்கும் நிகழ்வு தாழங்குடா முதியோர் இல்லத்தில் நேற்று (2015.01.19) அமைப்பின் தலைவர் வ.கமலதாஸ் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது அமைப்பின் வடக்குகிழக்கு மாகாணத்தின் திட்ட இணைப்பாளர் வே.வாமதேவன், திட்டஆலோசகர் ஜி.ரஞ்சித்குமார் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ர.பிரவாளினிஉட்பட முதியோர் சங்கத்தின் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டதுடன் சுமார் 1350 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய உலருணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment