கல்முனை கார்மேல் பற்றிமா சாதனையாளர் பாராட்டு
2014 இல் வெளியான 5ம் தர புலமைப் பரீட்சையில் அம்பாறை
மாவட்டத்தில் அதி கூடிய மாணவர்கள் சித்தியடைந்த கல்முனை கார்மேல் பற்றிமா
தேசிய பாடசாலையில் சாதனையாளர்களை பாராட்டும் விழா நேற்று (27) மாலை
முதல்வர் அருட் சகோதரர் ஸ்ட்ரீபன் மத்தியு தலைமையில் நடை பெற்றது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் பிரதம அதிதியாகவும் ,கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் ,பிரதிக்கல்விப் பணிப்பாளர் வீ.மயில் வாகனம் , கல்முனை தமிழ் பிரிவு கோட்டக்கல்விப் பணிப்பாளர் வீ.ஜெகநாதன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர் .
கல்லூரியல் சித்தியடைந்த 71 மாணவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு அவர்களுக்கான பாராட்டுக்களும் பரிசளிப்புக்களும் இடம் பெற்றன .அத்துடன் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப் பட்டனர்.

நிகழ்வில் பெற்றோர்களும் நலன் விரும்பிகள் பலரும் கலந்து கொண்டனர் .
Comments
Post a Comment