அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் Online மூலம் பதியலாம் (Application)

மேலதிக அரசாங்க அதிபர் விமலநாதன்

அம்பாறை மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்வதற்கான தரவுத்தளத்தினை ஒன்லைன் ஊடாக பதிவு செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன் தெரிவித்தார்.  
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்யும் வேலைகள் கடந்த 2012ம் ஆண்டு தொடக்கம் மாவட்ட செயலகத்தினால் விண்ணப்ப படிவங்கள் ஊடாக தரவுகள் பதியப்பட்டு வந்த போதிலும் தூர இடங்களிலிருந்து வருகின்ற போது அதற்கான கால நேரம் பண விரயம் மற்றும் பல அசௌகரிங்கள் என்பவற்றினை கவனத்தில் கொண்டு வேலையற்ற பட்டதாரிகள் இலகுவாக இப் பதிவினை ஒன்லைன் ஊடாக வீட்டில் இருந்தவாறே இலகுவாகவும், துரிதமாகவும்மேற்கொள்ள இம்முறையினை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

Please Click on your Divisional Secretariat Division to Proceed the Online Forum

(உங்களது பிரதேச செயலாளர் பிரிவை தெரிவு செய்யுங்கள்)
 
    
    
    
    
    
    
    

 
விண்ணப்பப் படிவத்திலுள்ள தகவல்கள் மிகவும் இலகுவானதோடு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளமையினால் தரவுகளின் உண்மைத் தன்மையில் எந்தவித சிக்கலும் ஏற்படாமல் இருப்பதைகருத்தில் கொண்டு இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  
இம்முறையினூடாக மாவட்டத்தின் வேலையற்ற பட்டதாரிகள் தரவுத்தளத்தினை செயற்படுத்துவதைநோக்காகக் கருதி எதிர்வரும் காலங்களில் இப்பதிவை ஒன்லைன் ஊடாக மாத்திரம் செய்தல் வேண்டுமென்பதுடன் மாவட்ட செயலகத்தில் இதுவரையில்பதிவு செய்துள்ளவர்களும்மீண்டும் இம் முறையினூடாக பதிவு செய்தல் வேண்டுமெனவும் அறிவித்துள்ளார்.  
இது தொடர்பாக பிரதேச செயலாளர்களிடம் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்