அரச நிறுவனங்களில் உயர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்
அரசாங்கத்துக்கு உட்பட்ட கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியாயாதிக்க சபைகளுக்கு தலைவர் மற்றும் பணிப்பாளராக பணியாற்றுவதற்கு விருப்பம் கொண்டுள்ள தொழில் அனுபவத்தைக் கொண்டவர்களிடம் இருந்து ஜனாதிபதி செயலாளர் விண்ணப்பங்களை கோரியுள்ளார்.
இதற்கு அமைவாக அரசாங்கத்திற்கு உட்பட்ட மேம்பாட்டு பிரதி நிறுவனங்கள், அரசியல் யாப்பு சபைகள், நிறுவனங்கள் வணிக நிறுவனங்கள், நியாதிக்க சபைகள் ஆகியவற்றிற்கு தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை அங்கத்தவர் ரீதியில் பணியாற்றுவதற்கு விருப்பம் கொண்டுள்ள தொழில் துறையினர் இதற்காக விண்ணப்பிக்க முடியும் என்று ஜனாதிபதியின் செயலாளர் P.B.ஜயசுந்தர வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது;
இதற்கான விண்ணப்பம் மற்றும் ஆலோசனைகளை டிசம்பர் மாதம் 18 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி மேலதிக செயலாளர், ஜனாதிபதி செயலகம், கொழும்பு 1 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள நேர்முக பரீட்சை சபையினால் தகுதியை கொண்டவர்கள் நேர்முக பரீட்சையின் மூலம் தெரிவுசெய்யப்படுவர்.
Comments
Post a Comment