வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களின் புகைப்படம் வௌியானது
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய 8 பேரின் புகைப்படம் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
IS அமைப்பின் AMAQ செய்தி சேவை ஊடாக இந்த புகைப்படம் வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த புகைப்படத்தில் உள்ள 8 பேரில் 7 பேர் முகத்தை மறைத்துள்ளதுடன் அதில் ஒருவர் மட்டும் முகத்தை திறந்தவாறு உள்ளார்.
முகத்தை திறந்தவாறு உள்ள குறித்த நபரே இந்த வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான குற்றவாளியான சஹ்ரான் ஹசீம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Comments
Post a Comment