நள்ளிரவு முதல் செரண்டிப் கோதுமை மாவின்விலை அதிகரிப்பு


இலங்கையில் காணப்படும் நம்பிக்கையை வென்ற கோதுமை மா உற்பத்தி நிறுவனமான செரண்டிப் மா ஆலை, தவிர்க்க முடியாத புறக்காரணிகள் காரணமாக தமது கோதுமை மா தயாரிப்புகளின் விற்பனை விலையை நவம்பர் 16 திகதி நள்ளிரவு 12 மணி முதல் 8 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பை மேற்கொள்ளும் தீர்மானத்தில் செல்வாக்குச் செலுத்திய புறக்காரணிகளில், கடந்த மாத காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பிறக்கம் ஒன்றாக அமைந்துள்ளது. 2018 ஜனவரி 1 ஆம் திகதி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 153.50 ரூபாவாக காணப்பட்டது.

ஆனாலும், இன்றை சூழலில் இந்தப் பெறுமதி 181.00 ரூபாவாக காணப்படுகின்றது. இந்த காலப்பகுதியில் சுமார் 27.50 ரூபா மதிப்பிறக்கத்தை இலங்கை ரூபாய் பதிவு செய்துள்ளது. இரண்டாவதாக, இந்த காலப்பகுதியில் சர்வதேச சந்தையில் கோதுமையின் விலை மற்றும் கப்பல் சரக்கேற்றல் விலைகள் 15% அதிகரிப்பை பதிவு செய்துள்ளன. மூன்றாவதாக, பணவீக்கம் மற்றும் பொதியிடல் மூலப்பொருட்கள் செலவுகள் அதிகரிப்பு அமைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிவரப்படி வருடாந்த பணவீக்கம் சுமார் 4% ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலை தொடர்பில் செரண்டிப் மா ஆலை பிரதம சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல்கள் அதிகாரி காலிங்க விஜேசேகர கருத்துத் தெரிவிக்கையில், ´செரண்டிப் மா ஆலைகளைச் சேர்ந்த எமது நோக்கம், ´தேசத்துக்கு செழுமையூட்டுவது´ என்பதாக அமைந்துள்ளது. இதை கடந்த 10 வருட காலமாக நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

துரதிர்ஷ்டவசமாக, பல்வேறு புறக்காரணிகளின் காரணமாக நாம் பல சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. இலங்கை முதலீட்டு சபையுடன் மேற்கொண்டுள்ள உடன்படிக்கையின் பிரகாரம் எவ்விதமான விலைக்கட்டுப்பாட்டுக்கும் நாம் உட்படவில்லை. மேலும், சட்ட ரீதியாக மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லாத நிலையில், இலங்கையில் நாம் இயங்கி வரும் காலப்பகுதியில் நுகர்வோர் அதிகார சபையின் சட்ட விதிமுறையை நாம் பின்பற்றி வருகின்றோம்.

ஆனாலும், 2018 நவம்பர் 26 ஆம் திகதி முதலான 1 வருட காலப்பகுதியில் எமது நிறுவனம் மேற்கொண்டிருந்த விலை அதிகரிப்பு கோரிக்கை விண்ணப்பங்களுக்கு சாதகமான பதிலை வழங்க நுகர்வோர் அதிகார சபை தவறியிருந்தது. இந்த விலை அதிகரிப்பை மேற்கொள்ள தீர்மானித்த காரணம், நாட்டில் கோதுமை மா தொழிலின் வீழ்ச்சியை தவிர்த்துக் கொள்வதற்காகும். இவ்வாறான நிலை ஏற்பட்டால், நாட்டில் உணவு தபடுப்பாடு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என்பதுடன், பெருமளவான இலங்கையர்களுக்கு தமது தொழில்களை இழக்கவும் நேரிடலாம்.´ என்றார்.

இலங்கை முதலீட்டு சபையின் அனுமதியின் கீழ் நிறுவப்பட்ட செரண்டிப் மா ஆலை, புகழ்பெற்ற ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் முதலீட்டாளரான அல் குராயிர் முதலீட்டில் ஆரம்பித்தது. 8 பில்லியன் ரூபாயை ஆரம்ப முதலீடாக மேற்கொண்டிருந்தது. இலங்கையில் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மேலாக, இலங்கையின் திறன் படைத்த மற்றும் திறனற்ற ஊழியர்களுக்கு குறிப்பிடத்தக்களவு தொழில் வாய்ப்புகளையும் வழங்கியிருந்தது.

உயர் தரம், போஷாக்கு மற்றும் பரந்தளவு கோதுமை மா தெரிவுகளை இலங்கையின் பேக்கரிகள், உணவகங்கள், ஹோட்டல்கள், இல்லங்கள், தொழிற்துறைகள் மற்றும் நுகர்வோர்களுக்கு செரண்டிப் மா ஆலை விநியோகித்து வருகின்றது. உலகில் காணப்படும் உயர் தர கோதுமையைக் கொண்டு, நவீன சுவிஸ் டீராடநச தொழில்நுட்பம் மற்றும் உலகத் தர அணியின் நிபுணத்துவத்தை பயன்படுத்தி, பசுமையான, பரிபூரண மற்றும் செழுமையான உற்பத்தியை விநியோகித்து வருகின்றது.

கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள நவீன வசதிகள் படைத்த ஆலையில் தனது செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன், தரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் உயர் நியமங்களை பின்பற்றி வருகின்றது. நிறுவனம் ISO 9001:2015, ISO 14001:2015, ISO 22000:2005, FSSC 22000, BS OHSAS 18001:2007 ஆகிய சான்றிதழ்களை பெற்றுள்ளதுடன், பாதக வாயுக்களை வெளியிடுவதை குறைத்து வெளியேற்றப்படும் கழிவுகளையும் குறைத்து சூழல் பாதிப்பை குறைக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்த வண்ணமுள்ளது. தனது செயற்பாடுகளில் வலு மற்றும் நீர் சிக்கன நடவடிக்கைகளையும் பின்பற்றுகின்றது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது