பாண்டிருப்பு ஸ்ரீ சித்திர வேலாயுதர் தேவஸ்தான வருடாந்த கும்பாபிஷேகம்
பாண்டிருப்பு அருள்மிகு ஸ்ரீ சித்திர வேலாயுதர் தேவஸ்தான வருடாந்த கும்பாபிஷேக தினநவோத்திர சத சங்காபிஷேக பெருவிழாவின் 11ஆம் நாள் சடங்குகளான சப்பரத் திருவிழா , பாற்குடப்பவனி , சங்காபிஷேக கிரியைகள் இன்று (03) நடை பெற்றது.
கடந்த மே மாதம் 23 ஆம் திகதி விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமான உற்சவகால கிரியைகள் கடந்த 10 தினங்களாக புண்ணியாகவாசனம்,வாஸ்துசாந்தி , வசந்த மண்டப பூஜை, சுவாமி உள்வீதி வலம் வருதல் நடை பெற்று இன்று காலை சப்பரத் திருவிழா இடம் பெற்றது. அதனை தொடர்ந்து பாண்டிருப்பு மாரியம்மன் தேவாலயத்தில் இருந்து ஆரம்பமான பால்குட பவனி நிகழ்வில் பெருந் தொகையான பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாளை திங்கட் கிழமை காலை 7.00 மணிக்கு திருப்பொற்சுண்ண சூர்ணோற்சவ ஆராதனையைத் தொடர்ந்து பகல் மகேஸ்வரப் பூஜையாக சமுத்திர தீர்த்தோற்சவம் இடம் பெற்று இரவு 7.00 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சித்திர வேலாயுதப் பெருமானுக்கு சுப முகூர்த்தத்தில் மணவாளக் கோல திருமாங்கல்யதாரண திருப் பொன்னூஞ்சல் நடை பெற்று கிரியைகள் யாவும் நிறைவு பெறும்.
Comments
Post a Comment