சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி!கல்முனையில் கவனஈர்ப்பு பேரணி!!
(யூ.எம்.இஸ்ஹாக் )
சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி வைப்பேம் எனும் தொனிப் பொருளில் சித்திரவதைக்கு எதிராக இன்று (30) வியாழக்கிழமை கல்முனையில் கவனஈர்ப்பு பேரணியொன்று நடைபெற்றது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தின் ஏற்பாட்டில் அதன் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீப் தலைமையில் இந்தப் பேரணி நடைபெற்றது.
கடந்த காலங்களில் இடம் பெற்ற சித்திரவதைகள் மற்றும் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான சித்திரவதைகள் இடம் பெறாமல் தடுப்பதுடன் அவர்களை சித்திரவதைகள் வன்முறைகளில் இருந்து பாதுகாக்குமாறு இந்த கவன ஈர்;ப்பு பேரணியின் போது வலியுறுத்தப்பட்டது.
இந்தப் பேணியில் கலந்து கொண்டோர் சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி, இல்லத்து வன்முறையை இல்லா தொழிப்போம், வன்முறைகளில் மனித உயிர்களை பாதுகாப்போம், சித்திரவதைக்குள்ளானவர்களுக்கு என்றும் உதவுவோம், சித்திரவதை ஒவ்வொருவரையும் பாதிக்கும் என்பன போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் தாங்கியிருந்தனர்.
இப்பேரணியில் கல்முனை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி AWA .கப்பார் உட்பட பொலிஸ் அதிகாரிகள், கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன் உட்பட பாசடாலை மாணவர்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தின் முன்பாக ஆரம்பமான இப்பேரணி கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகம் வரை சென்று நிறைவடைந்து பிரதேச செயலக கேட்ப்போர் கூடத்தில் விழிப்புணர்வு கருத்தரங்குக்கும் நடை பெற்றது
Comments
Post a Comment