சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் இபாட் வீட்டுத்திட்டம் திறந்து வைப்பு


"எல்லோருக்கும் வசந்தம்" மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையில் சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் கடந்த சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இபாட் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 100 வீட்டுத்திட்ட தொகுதி, பல்தேவைக் கட்டிடம், விற்பனை நிலையம் என்பன திறந்து வைக்கும் நிகழ்வும் நேற்று சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வு இபாட் நிறுவனத்தின் தேசிய நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் பிரதாப் சிங் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாகவும், கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி பிரதியமைச்சர் சரத்குமார குணரத்ன, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், ஆரிப் சம்சுதீன், கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மற்றும் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரிகள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.





கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு இவ்அபிவிருத்தி திட்டங்களுக்கு 62 மில்லியன் ரூபாவினை செலவிட்டுள்ளது.

இதன்போது அம்பாறை மாவட்டத்திலுள்ள மீனவ குடும்பங்கள் 500 பேருக்கு ஒரு லட்சம் ரூபா வீதம் சுயதொழில் கடனுக்கான காசோலை அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சேவையினைப் பாராட்டி மக்களினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்