கிழக்கு அமைச்சர் உதுமாலெப்பைக்கு நற்பிட்டிமுனை மக்கள் நன்றி தெரிவிப்பு

நட்பிட்டிமுனையில் நிர்மாணிக்கப்படவுள்ள வீதி வடிகான் அபிவிருத்தியில் காணப்பட்ட குளறுபடிக்கு கிழக்கு மாகான வீதி அபிவிருத்தி அமைச்சர் அதிரடி நடவடிக்கை எடுத்து தீர்வு பெற்று கொடுத்தமைக்கு  இந்த நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது .

உலக வங்கியின் 69 மில்லியன் ரூபா நிதியில் நற்பிட்டிமுனை பாண்டிருப்பு வீதி இருபக்க வடிகானுடன் அபிவிருத்தி செய்யப்படுகின்றது .நற்பிட்டிமுனை ஜும்மா  பள்ளிவாசல் அருகில் உள்ள உடைந்த வடிகானை உடைதகற்றாமல்  செப்பனிடுவதற்கு எடுத்த முயற்சியை கண்டித்து நற்பிட்டிமுனை மக்கள் கடந்த வாரம்  அமைச்சர் உதுமாலெப்பைக்கு எதிராக கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் செய்ய இருந்தனர் .இதன் பிரதி பலிப்பாக  இன்று அமைச்சரின் ஏற்ப்பாட்டில்  நற்பிட்டிமுனை அல் -அக்ஸா  மகா வித்தியாலய ஆராதனை மண்டபத்தில் உயர் மட்டக் கூட்டம் நடை பெற்றது.














இக்கூட்டம்  அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார்  தலைமையில் நடை பெற்றது .பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன ,வீதி அபிவிருத்தி அமைச்சின் கிழக்கு மாகாண  பணிப்பாளர்  வீ.கருணை நாதன் ,பொறியியலாளர் ஏ.எம்.ரிஸ்வி ,கிழக்கு மாகான சபை உறுப்பினர்களான எம்.ராஜேஸ்வரன்,த .கலையரசன் ,கல்முனை மாநகர  சபை உறுப்பினர்களான ஏ.எச்.நபார் ,சி.எம்.முபீத் ,பிரதேச செயலாளர் எம்.எம்.நவ்பல்  உட்பட பொறியியலாளர்கள் ,ஊர் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம மக்கள் அனைவரது வேண்டுகோளுக்கிண ங்க  வீதி அபிவிருத்தி அதிகார சபையினதும் ,சீரா நிறுவனத்தின்  உதவியுடனும் ,அமைச்சின் கிழக்கு மாகாண  பணிப்பாளரரின் ஒத்துழைப்புடன்  வடிகானை புதிதாக நிர்மாணிப்பதற்கு  அமைச்சர் உதுமாலெப்பை உறுதி வழங்கினார் .அமைச்சரின் வாக்குறுதியை ஏற்ற மக்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்