தேசத்திற்கு மகுடம் ஆரம்பம் - முஸ்லிம் அரசியல்வாதிகள் உற்சாகத்துடன் பங்கேற்பு


'தெயட கிருள'' தேசத்துக்கு மகுடம் 2013 தேசிய அபிவிருத்திக் கண்காட்சி இன்று அம்பாறை ஹாடி உயர் தொழில் நுட்பவியல் கல்லூரியில் பிற்பகல்05.30 மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த கண்காட்சியை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் உட்பட கிழக்கு மாகாணமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

23ம் திகதியிலிருந்து முதல் நாளான 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியின் முதல் நாளான இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ,தொலைத் தொடர்புகள் அமைச்சரும் 'தெயட கிருள'' தேசத்துக்கு மகுடம் 2013 தேசிய அபிவிருத்திக் கண்காட்சியின் தலைவருமான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, நீதியமைச்சரும் ஸ்ரீ.ல.மு.கா தலைவருமான றஊப் ஹக்கீம், வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் அடங்கலாக முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.





30 வருட கால யுத்தத்தினால் சேதமடைந்த கிழக்கு பிரதேசத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் 2013 தேசத்துக்கு மகுடம் கண்காட்சி இம்முறை அம்பாறையில் நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி கல்வி, சுகாதாரம், குடிநீர் வசதி, நீர்ப்பாசன திட்டங்கள் அடங்கலாக 30 ஆயிரம் மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இதனோடு இணைந்ததாக அண்டிய மாவட்டங்களும் முன்னேற்றப்பட்டு வருகின்றன. தேசத்துக்கு மகுடம் கண்காட்சியையொட்டி மொத்தமாக 60 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் பாரிய அபிவிருத்திகள், கண்காட்சி ஏற்பாடுகள் என்பன செய்யப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் அம்பாறை மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 682 கிலோ மீற்றர் வீதிகள் 12634 மில்லியன் ரூபா செலவில் வீதி அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் 214 கிலோ மீற்றர் வீதிகள் 4383 மில்லியன் ரூபா செலவிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 257 கிலோ மீற்றர் வீதிகள் 4475 மில்லியன் ரூபா செலவிலும் திருகோணமலை மாவட்டத்தில் 211 கிலோ மீற்றர் வீதிகள் 3776 மில்லியன் ரூபா செலவிலும் அபிவிருத்தி செய்யத்திட்டமிடப்பட்டுள்ளன.

கண்காட்சியை பார்வையிட வரும் பொது மக்களின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு மேலதிகமாக முப்படையினரும் அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அம்பாறை தேசத்திற்கு மகுடம் – 2013 கண்கண்காட்சியை முன்னிட்டு அம்பாறை நகருக்கு வரும் பொதுமக்கள் மற்றும் வாகனங்களின் பாதுகாப்புக்கு 5 ஆயிரம் பொலிஸாரும், 1500 விஷேட அதிரடிப் படையினரும் விஷேட பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகன தெரிவித்தார்.

கண்காட்சியை பார்வையிட வரும் பொதுமக்களுக்கு பொலிஸார் விஷேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

பாடசாலை சீருடையில் வரும் மாணவர்களுக்கு இலவசமாக கண்காட்சியை பார்வையிட அனுமதி வழங்கப்பட உள்ளதோடு தேசத்துக்கு மகுடம் இலச்சினை பொறிக்கப்பட்டுள்ள இலங்கை லொத்தர் சபையின் 20 ரூபா லொத்தர் சீட்டை பயன்படுத்தியும் கண்காட்சியைப் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்