அம்பாறை ஆஸ்பத்திரியில் சிறுவர் சிகிச்சை நிலையம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!


அம்பாறை ஆஸ்பத்திரியில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட சிறுவர் சிகிச்சை நிலையத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திறந்துவைத்தார்.

இது தொடர்பில் நடைபெற்ற விசேட வைபவத்தில் ஆஸ்பத்திரியில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு ஜனாதிபதி விருதுகள் வழங்கிக் கௌரவித்தார்.

அதன் பின்னர் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் நோயார்களை ஜனாதிபதி நேரில் சந்தித்து உரையாடினார்.



சுகாதரா அமைச்சினால் நாடு முழுவதிலும் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு 250 அம்பியூலன்ஸ் வண்டிகளை வழங்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு - திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்ட ஆஸ்பத்திரிகளுக்கான அம்பியூலன்ஸ் வண்டிகளை ஜனாதிபதி கையளித்தார்

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்