அம்பாறை விமான நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு


சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் ஒரு அம்சமாக புனரமைப்புச் செய்யப்பட்டுள்ள அம்பாறை உகன விமானப் படைமுகாம் சூழலில் அமைக்கப்பட்டுள்ள உள்ளூர் விமான நிலையம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
“தேசத்துக்கு மகுடம்” தேசிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிழக்கிலங்கையில் பல அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் குறிப்பிடத்தக்க அம்சமாக மேற்படி விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிழக்கின் அபிவிருத்தியில் முக்கிய அம்சமாக விளங்கும் மேற்படி விமான நிலையம் 1600 மீற்றர் நீளமான பாதையையும் பிரயாணிகள் கூடம் உள்ளிட்ட ஏனைய பல பிரிவுகளையும் உள்ளடக்கியுள்ளது. தினி 32 வீ12 போன்ற விமானங்களை செயற்படுத்தும் வகையில் இவ் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
மேற்படி நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் பி. தயாரத்ன, அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பிரதியமைச்சர் நிர்மல கொத்தலாவல, விமானப் படைத்தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்கிரம ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று