ஹலால் தொடர்பான குறுஞ்செய்தி உங்களுக்கும் வருகிறதா ?

ஹலால் தொடர்பில் குறுஞ்செய்தி தகவல்களை உறுதி செய்யாமல் நம்ப வேண்டாம் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா தெரிவித்துள்ளது. 

அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் ஹலால் தொடர்பாக பொது மக்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு நேற்று (23) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் மணியளவில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் ஹலால் சபையின் பொறுப்பாளர் மௌலவி எம்.எம்.இர்பான், கண்டி மத்ரஸதுல் புர்கானியா அரபுக் கல்லூரியின் அதிபரும் ஹலால் சபையின் உறுப்பினருமான எச்.உமர்தீன் ஆகியோர் விஷேட உரையாற்றினர். 

இந்நிகழ்வில் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா தலைவர் மௌலவி அலியார் (பலாஹி) இகாத்தான்குடி ஜம்மியதுல் உலமா செயலாளர் மௌலவி ஜிப்ரி (மதனி), மட்டக்களப்பு மாவட்ட ஜம்மியதுல் உலமா செயலாளர் மௌலவி முஸதபா (இஸ்லாஹி), காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதித் தலைவர் அப்துல்ஜவாத் பீ.ஏ கவிமணி எம்.எச்.எம்.புஹாரி (பலாஹி), சம்மேளன உப செயலாளர் சாதிக்கீன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான யூ.எல்.எம்.முபீன், கே.எல்.எம்.பரீட், தொழிலதிபர் கலீல் மற்றும் உலமாக்கள், அரபு மத்ரசாக்களின் அதிபர்கள் உப அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள், ஊர் பிரமுகர்கள், புத்திஜீவிகள் பெருந்திரளான பொதுமக்கள உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

இதன்போது காத்தான்குடி, காங்கேயனோடை, ஏறாவூர் உள்ளிட்ட பிரதேசங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். 

குறித்த இம்மாநாட்டில் ஹலால் என்றால் என்ன ? இஜம்மியதுல் உலமா ஹலால் விடயத்தில் ஏன் இந்த முடிவை எடுத்தது, ஜம்மியதுல் உலமாவுக்கெதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களும் அவற்றிற்கான பதில்களும் என பல்வேரு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் அது தொடர்பில் பூரண விளக்கமுமளிக்கப்பட்டது. 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்