கல்முனையில் மின்னொளி வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி!


கல்முனை மிஸ்பாஹ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் அணிக்கு மூன்று பேர் கொண்ட மின்னொளி வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப விழா கழகத்தின் தலைவர் ஏ.டப்ளியு.எம். ஜெஸ்மின் தலைமையில் கல்முனை கடற்கரை அல்- மிஸ்பாஹ் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

ஆரம்ப விழாவிற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் மற்றும் கௌரவ அதிதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 22 விளையாட்டுக் கழகங்கள் இப்போட்டியில் பங்குபற்றுகின்றன.

ஆரம்பநாள் முதலாவது போட்டியில் சாய்ந்தமருது அல்-ஜலால் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து கல்முனை அல்- மிஸ்பாஹ் விளையாட்டுக் கழகம் விளையாடியது. இதில் சாய்ந்தமருது அல்-ஜலால் விளையாட்டுக ;கழகம் கல்முனை அல்- மிஸ்பாஹ் விளையாட்டுக் கழகத்தை தோற்கடித்து வெற்றிபெற்றது. 

இச்சுற்றுப் போட்டிக்கான பூரண அனுசரணையினை கல்முனை ஒரேஞ் டீ கம்பனி, டொப் குயின் நிறுவனத்தினர் வழங்குகின்றனர். இதன் இறுதிப் போட்டி எதிர்வரும் 29.03.2013 வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதாக மிஸ்பாஹ் விளையாட்டுக் கழகத் தலைவர் ஏ.டப்ளியு.எம். ஜெஸ்மின் தெரிவித்தார்.


Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது