தயட்ட கிருள்ள தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சி நேற்று உத்தியோக பூர்வமாக அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் பொது ஊடக வலயக் கண்காட்சிக் கூடத்தை ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல திறந்து வைத்;தார், நிகழ்வில் ஊடக அமைச்சின் செயலாளர் கணேகல, ரூபவாஹினி கூட்டுத்தாபன தவிசாளர் மொஹான் சமரனாயக, சுயாதீன ஊடக வலையமைப்பின் தவிசாளர் றொஸ்மன் சேனரத்ன உட்பட ஊடகத்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் சமூகவிவகார பிரிவின் கல்முனை கிளை ஏற்பாடு செய்த "மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" என்ற கருப்பொருளில் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகம் செய்யும் நிகழ்வும் இன்று (28.10.2017)கல்முனை மஸ்ஜிதுல் ஹைராத் பள்ளிவாசலில் இடம் பெற்றது . இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளை பொறுப்பாளர் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பள்ளிவாசல் வளாகத்தில் மரம் நட்டு வைத்ததோடு பள்ளிவாசல் மஹல்லாவை சேர்ந்த முஸ்லீம் தமிழ் மக்களுக்கும் , பொது நிறுவனங்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கி வைத்தார் கல்முனை அல் -பஹ்ரியா மகாவித்தியாலய அதிபர் ரசாக் ,கல்முனை அல் -மிஸ்பாஹ் மகாவித்தியாலய அதிபர் அமீன் உட்பட இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளை உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்
முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மறிச்சிக்கட்டி மக்களின் பிரச்சினை அரசியல் கண்கொண்டு பார்க்க வேண்டியதோ ,கட்சிகள் நிறங்கள் சார்பாக பார்க்க வேண்டிய விடயமோ அல்ல . இது ஒரு சமுதாயத்தின் உரிமைப் பிரச்சினை மறிச்சிக்கட்டியில் இன்று ஏற்பட்டிருக்கும் ஆபத்து இந்த நாட்டில் வாழும் 20 இலட்சம் முஸ்லீம்களையும் பாதிக்கக்கூடியது .எமது போராட்டத்திற்கு தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்குகின்ற அதே வேளையில் முஸ்லீம் அரசியல் தலைமைகள் கட்சி நிறம் பார்த்து பிரித்து செயற்ப்படுவது சமுகத்திற்கே வெட்க கேடான விடயம் . இவ்வாறு முசலி பிரதேச அபிவிருத்தி குழு ஆலோசகர் M.L.S.அலிகான் ஷரீப் தெரிவித்தார் மறிச்சிக்கட்டியில் கடந்த 20 நாட்களாக இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம்கள் பலர் இணைந்து கொண்டனர் . கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் C.M.முபீத் தலைமையில் சென்ற குழுவினர் அந்த மக்களுடன் இணைந்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர் . அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அலிக...
Comments
Post a Comment