பெண்களுக்கெதிரான வன்முறைகளா..? உடனே தொடர்புகொள்ளுங்கள்..
பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் உடனுக்குடன் முறைப்பாடுகளைச் செய்வதற்காக ‘1938’ என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்பு கொள்ள முடியும்.
சமூகத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் துஷ்பிர யோகங்களுக்கும் இம்சைகளுக்கும் உள்ளாகின்ற பெண்களின் நலன் கருதியே ‘1938’ தொலைபேசி இலக்கத்தையும் அதனோடு செயற்படக் கூடிய பொலிஸ் கரும பீடமொன்றையும் ஸ்தாபித்துள்ளது. துஷ்பிரயோகம் மற்றும் பல்வேறு விதங்களில் இம்சைக்குள்ளாக்கப்படும் பெண்கள் உடனடியாக மேற்படி இலக்கத்தோடு தொடர்பு கொண்டு தமக்கான சட்ட உதவிகளையும் நிவாரணங்களையும் பெற இதன் மூலம் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வீடுகளில், தொழில்புரியும் இடங்களில் மற்றும் பஸ், ரயில் போன்ற போக்குவரத் துக்களில் பெண்கள் எதிர்கொள்ள நேரும் துஷ்பிரயோகங்களை இத்தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். முறைப்பாடுகளை ஏற்கும் விசேட பொலிஸ் பிரிவு அது தொடர்பில் உடனடியாகச் செயற்பட்டு விசாரணைகளில் ஈடுபடும்.
அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்ட நிவாரணத்தையும் பெற்றுத் தரும்.
இதேவேளை, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் பெண்களுக்கெதிரான துஷ்பிரயோகத்தைக் கட்டுப் படுத்தும் விசேட செயற்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனைகளைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Comments
Post a Comment