அரசாங்க, தனியார்துறை முஸ்லிம் ஊழியர்க்கு ரமழான் விஷேட விடுமுறை
அரசதுறை முஸ்லிம் ஊழியர்களுக்கு ரமழான் கால சமயக் கடமைகளை நிறை வேற்றும் வகையில் விஷேட விடுமுறையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதேபோன்ற விடுமுறையை தனியார் துறையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கும் வழங்குமாறு தொழில் அமைச்சர் காமினி லொகுகே அனைத்து தனியார்துறை தொழில் வழங்குநர்களையும் கேட்டுள்ளார்.
எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் செப்டம்பர் 10 ஆம் திகதி வரை இவ்விஷேட விடுமுறையை வழங்குமாறு அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தினசரி தொழுகைக்காக அனுமதிக் கப்பட்டுள்ள நேரம்:
மு.ப 3.30 முதல் மு.ப. 6.00 மணி வரை
பி.ப 3.15 முதல் பி.ப 4.15 மணி வரை
பி.ப 6.00 முதல் பி.ப 7.00 மணி வரை
பி.ப. 7.30 முதல் இரவு 10.30 மணி வரை
நோன்பு பெருநாள் தினத்தன்று விசேட விடுமுறை,
தகுதியுடைய முஸ்லிம் ஊழியர்களுக்கு நோன்பு காலம் முடிவடைவதற்கு 14 நாட்களுக்கு முன்னராக பண்டிகை அல் லது வேதன முற்பணக் கொடுப்பனவை வழங்குமாறும் அமைச்சர் தனதறிக்கையில் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments
Post a Comment