மின்தடையென்றால் 1987 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளுங்கள்
மின்சார விநியோகம் தடைப்படும்
சந்தர்ப்பங்களில் 1987 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்புகொண்டு
தகவல்களைத் தெரிவிக்குமாறு இலங்கை மின்சார சபை பாவனையாளர்களைக்
கேட்டுள்ளது. இந்தத் தொலைபேசி இலக்கம் தொடர்பாக முன்னரும் மக்களுக்கு
அறிவித்திருந்தபோதிலும் அவர்கள் மின்சார சபையின் பிரதேச அலுவலகங்களுக்கே
அறிவிப்பதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் வித்யா அமரபால தெரிவிக்கிறார்.
மின்சாரப் பாவனையாளர்கள் 1987 என்ற
இலக்கத்தினூடாக அறிவிப்பதன் மூலம் மின்சாரத் தடைக்கான காரணம் மற்றும் அது
தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய தீர்வு நடவடிக்கை போன்றவற்றைப்
பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்குமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்