பொத்துவில் பகுதியில் வாகனவிபத்து ஆசிரியர் ஒருவர் பலி.

அக்கரைப்பற்றில் இருந்து பொத்துவில் நோக்கிச் சென்று கொண்டிருந்த டொல்பின் வான் வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

இதில் ஒருவர் மரணமானார். ஐவர் படுகாயமடைந்தனர். ஆறு ஆசிரியர்கள் பயணம் செய்த இந்த வானில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் வான் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

பொத்துவில் தாருல் பலாஹ் வித்தியாலய த்தில் கற்பிக்கும் லாபிர் (46வயது) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையான ஆசிரியரே இச் சம்பவத்தில் மரணமானார்.
வானில் பயணம் செய்த இரு அதிபர்கள் ஒரு ஆசிரியை ஒரு ஆசிரியர் வான் சாரதி ஆகியோர் படுகாயமடைந்து அக்கரைப்பற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்