கூட்டமைப்புக்கும் , முஸ்லிம் காங்கிரஸ்க்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடரும்.



அரசியல் யாப்பு சீர்த்திருத்தத்துக்கு தமது முழுமையான ஆதரவை வழங்க சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ள போதும், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் தங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடரும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதி உயர் பீடத்தின் கூட்டத்தை தொடர்ந்து, அரசாங்கத்தின் அரசியல் சீர்த்திருத்தத்துக்கு முழுமையான ஆதரவை வழங்க அந்த கட்சி நேற்று தீர்மானித்தது.
எனினும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் எதிர்கட்சியுடனேயே இருக்கும் எனவும், எதிர்கட்சிகளுடனான தமது செயற்பாடுகளில் இந்த தீர்மானத்தினால் பாதிப்பு ஏற்படாது எனவும் கட்சி அறிவித்திருந்தது.
இந்த நிலையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளின் நிலை குறித்து,  தமிழ் தேசிய கூட்டமைப்பை வினவிய.போது கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சுமந்திரன், ஏற்கனவே இணக்கம் காணப்பட்டதன் அடிப்படையில் இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்