கிழக்கு மாகாண சபை பொது மக்கள் முறைப்பாட்டுக் குழுவின் முறைப்பாட்டு பெட்டிகள் அங்குரார்ப்பண வைபவம்.
கிழக்கு மாகாண சபை பொதுமக்கள் முறைப்பாட்டுக் குழுவின் முறைப்பாட்டுப்
பெட்டிகள் அங்குரார்ப்பண வைபவம் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய
மாவட்டங்களில் இடம்பெற இருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கான
முறைப்பாட்டுப் பெட்டிகள் அங்குரார்ப்பண வைபவம் முதலமைச்சர்
சி.சந்திரகாந்தன் ஆரம்பித்து வைக்க இருக்கின்றார். எதிர்வரும் 27.08.2010
அன்று கல்லடியில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி ஆணையாளர்
மகாநாட்டு மண்டபத்தில் மு.ப 10.30 மணிக்கு மேற்படி நிகழ்வு இடம்பெறும்.
Comments
Post a Comment