ஒலுவில் பிரதேச கடற்படை முகாமை அகற்ற ஜனாதிபதி நடவடிக்கை

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒலுவில் பிரதேசத்தில் கடற்படை முகாமொன்று அமைக்கப்பட்டிருப்பது குறித்து  பிரதேச வாசிகள் மற்றும் மீனவர்களும் இரண்டு மாதங்களுக்கு முன்னர்  தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர் இதை தொடர்ந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதியை சந்தித்து இது தொடர்பாக பேசியுள்ளார்.
இதன்போது ஒலுவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாமை அங்கிருந்து அகற்றுவதாக உறுதியளித்துள்ளார் இது தொடர்பாக பாதுகாப்பு செயலாளருடன் விரைவில் பேசி முகாமை அங்கிருந்து அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்துள்ளார் என்று ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார் ஏற்கனவே ஜனாதிபதிக்கு இது தொடர்பாக கடிதம் மூலம் அறிவித்துள்ள போதிலும் எவ்வித சாதகமான பதிலும் இது வரை கிடைக்கவில்லை என  பிரதேச வாசிகள் கடந்த காலங்களில் தெரிவித்தமை குறிபிடத்தக்கது தென் கிழக்கு பல்கலைக்கழகம் அமைந்துள்ள இப்பிரதேசத்தில் தற்போது துறைமுகமென்றும் அமைக்கப்பட்டு வருவதால் இப்பகுதி கேந்திர முக்கியத்துவம் பெற்ற பிரதேசமாக கருதப்படுகின்றது.
சுனாமியினால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட பாடசாலை கட்டிடமொன்றிலேயே கடற் படையினர் முகாமிட்டிருப்பதை காணக் கூடியதாக உள்ளது. ஆனால் இப்பாடசாலைக் கட்டிடத்தில் மதரசாவும், பாலர் பாடசாலையென்றும் நடை பெற்று வந்ததாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர் மீனவர்கள் மீது கட்டுப்பாடு விதிக்கப்பட்டு சுதந்திரமாக தொழிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படக்கூடிய சூழ்நிலை தென்படுவதாகவும் கூறியுள்ளனர்

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்