நாளை வடக்கு, கிழக்கில் அதிக வெப்பம்!

-நாளை மறுதினம் முதல் மழைக்கான காலநிலை
நாளைய தினம் (03) நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அதிக வெப்ப காலநிலை காணப்படலாம் என, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகளிலும், வட மேல், ஊவா மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஒரு சில இடங்களிலும் கவனம் செலுத்தக்கூடிய வகையில் அதிக வெப்ப காலநிலை காணப்படும் என எதிர்பார்ப்பதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
பொலன்னறுவை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் வெப்பநிலை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலையும் அதன் எச்சரிக்கை மட்டமும்
27-38 : சாதாரணமானது

39-45 : எச்சரிக்கை மட்டம் - அதிக நேரம் வெட்ட வெளியில் நிற்றல் மற்றும் வேலைகளில் ஈடுபடுவதன் காரணமாக களைப்பு நிலை ஏற்படலாம். மேலும் வேலைகளில் ஈடுபடுவதன் மூலம் அதிக நீரிழப்பு காரணமான தசைப் பிடிப்பு (Heat Cramps) ஏற்படலாம்
46-52 : அதிக எச்சரிக்கை மட்டம் - அதிக நீரிழப்பு காரணமான தசைப் பிடிப்பு (Heat Cramps), வெப்ப அதிகரிப்பு காரணமான அதிக களைப்பு (Heat Exhaustion) ஏற்படலாம்.  மேலும் வேலைகளில் ஈடுபடுவதன் மூலம் உடலின் வெப்ப சமனிலை பேணல் நிறுத்தப்பட்டு உடல் செயலிழப்பு (Heat Stroke) நிலை ஏற்படலாம்
52 இலும் அதிகம் : அபாயம் - அதிக நீரிழப்பு காரணமான தசைப் பிடிப்பு (Heat Cramps), அதிக களைப்பு (Heat Exhaustion), மேலும் வேலைகளில் ஈடுபடுவதன் மூலம் உடலின் வெப்ப சமனிலை பேணல் நிறுத்தப்பட்டு உடல் செயலிழப்பு (Heat Stroke) நிலை ஏற்படலாம்

(வளி மண்டலத்தில் நிலவும் வெப்பநிலையிலும் உடலான் உணரப்படும் வெப்ப நிலையின் அடிப்படையில் எதிர்வு கூறல்களின் அடிப்படையில் மேற்படி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது)
இது தொடர்பில் செயற்பட வேண்டிய விதம்:

வேலைத் தளத்தில்: தேவையான அளவில் நீரை பருகவும். முடியுமான வரை நிழல் உள்ள இடங்களில் ஓய்வெடுங்கள்.
வீட்டில்: வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் அவதானம் செலுத்துங்கள்
வாகனங்களில்: சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்லாதீர்கள்
வெட்ட வெளியில்: அதிகளவில் களைப்படையும் செயற்பாடுகளை குறைத்துக்கொள்ளுங்கள். நிழல் உள்ள இடங்களை நாடுங்கள். தேவைக்கேற்ப நீரை பருகுங்கள்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 011 2675303 எனும் தொலைபேசி வழியாக சுற்றாடல் மற்றும் தொழில்சார் சுகாதார பணிப்பாளரை அணுகுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

மே 04 முதல் நாடு முழுவதும் மழைக்கான காலநிலை
இதேவேளை, நாளை மறுதினம் (04) முதல் நாடு முழுவதும் மழைக்கான காலநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவா, தென், மத்திய, வட மேல் மற்றும் ஊவா மகாணங்களிலும் அநுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளிலும் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று மேல் மற்றும் தென் பகுதி கடல் பிரதேசங்களில் காலை வேளையில் மழை ஏற்படலாம் எனம், தெற்கு மற்றும் ஊவா மாகணங்கள் மற்றும் இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களில் 50 மில்லி மீற்றர் (5cm) வரையான சாதாரணமான கடும் மழை ஏற்படலாம் என திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.
சப்ரகமுவா மற்றும் மத்திய மாகாணங்களின் ஒரு சில இடங்களில், காலை வேளையில் பனி மூட்ட நிலையை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்