கல்முனை மாநகரத்தில்; பெரும் சவலாலாக இருந்து வருகின்ற திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காணப்படும்


கல்முனை மேயர் ஏ.எம்.றக்கீப்

(பி.எம்.எம்.ஏ.காதர்) 
கல்முனை மாநகரப் பிரதேசத்திலே பெரும் சவலாக இருந்து வருகின்ற திண் மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு  காண்பதற்று துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தெரிவித்தார். 
கல்முனை மாநகர சபையின் ஆறாவது மேயராகத் தெரிவு  செய்யப்பட்டுள்ள மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப்பைப் பாராட்டி கௌரவித்த நிகழ்வு  செவ்வாய்க்கிழமை(08-05-2018)மாலை மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
இங்கு உரையாற்றிய போதே மேயர் றக்கீப் இவ்வாறு தெரிவித்தார்.பெரிய நீலாவணை  நெசவாளர் சமூக சேவை மன்றம் ஏற்பாடு செய்திருந்த இந்த கௌரவிப்பு நிகழ்வு  கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி சிரேஷ்ட தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்வின் நெறிப்படுத்தலில் மன்றத்தின் தலைவர் ஏ.எல்.சபுறுத்தீன் தலைமையில் நடைபெற்றது.
மேயர் றக்கீப் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது :-கல்முனை மாநகரப் பிரதேசத்திலே பல்வெறு பிரச்சினைகள் உள்ளன அவற்றை உடனடியாகத் திர்த்து வைக்க முடியாது பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை வகைப்படுத்தி நீண்ட கால திட்டமிடலின் அடிப்படையிலேயே முன்னெடுக்க வேண்டும் அதற்கான நடவடிக்கைகள் தற்பொழு முன்னெடுக்கப்ட்டு வருகின்றன அவை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.
கல்முனை மாநகர சபையின் இரண்டாம் வட்டார மக்கள் என்னை வெற்றிபெறச் செய்து எனது கௌரவத்தைப் பாதுகாத்திருக்கின்றார்கள் அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவிப்பதுடன் அவர்களை என்றும் மறக்காமல் நன்றியுணர்வுடன் இருப்பேன் எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தனது பாரியார் திருமதி பாத்திமா நஸ்ரின் சகிதம் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு,பொன்னாடை போர்த்தி,தலைப்பாகை அணிவித்து,வாழ்த்துப் பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.கவிஞர் ஜீனாராஜ் வாழ்த்துப் பாவை எழுதி வாசித்தார்.    
இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி, திட்ட முகாமையாளர் ஏ.எம்.எஸ்.நயீமா, மருதமுனை,நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கி முகாமையாளர் சட்டத்தரணி எம்.எம்.எம்முபீன், வர்த்தகர் ஏ.எச்.முகம்மட் கபீர், கலாச்சார மேம்பாட்டு உத்தியோகத்தர் ஐ.எல்.றிஸ்வான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மன்றத்தின் செயலாளர் வி.எம்.ஹிஸாம், பொருளாளர் எஸ்.உபைதுஸ் சத்தார் மற்றும் உறுப்பினர்களின் பங்களிப்புடன் மருதமுனை, நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கியின் உதவி முகாமையாளர் எம்.ஐ.எம்.முஜீப் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.    






Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்