பஸ்ஸிற்குள் அரவம் தீண்டி இளம் வயது தாய் காயம்
குழந்தைக்கு மருந்தெடுத்துக் கொண்டு பஸ்ஸில் வந்து கொண்டிருக்கையில் பஸ்ஸிற்குள் அரவம் தீண்டிய சம்பவமொன்று அண்மையில் (13) இறக்காமம் பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
இறக்காமம் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான ஏ. ஜியானாபீவி (26) என்பவரே அரவம் தீண்டப்பட்டு அம்பாறைப் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது பற்றி மேலும் தெரிய வருவதாவது, சுகவீனமுற்றிருந்த தனது இரண்டு வயதுக் குழந்தைக்கு மருந்தெடுப்பதற்காக தனது கணவருடன் அக்கரைப்பற்றுக்குச் சென்று மீண்டும் வீடு செல்வதற்காக தனியார் பஸ்ஸொன்றில் பிரயாணித்துக் கொண்டிருக்கையில் அக்கரைப்பற்று அம்பாரை வீதியில் எட்டாம் கட்டைச் சந்தியை அண்மித்த நிலையில் பிரயாணிகள் திடீரென பாம்பு பாம்பு என்று கூக்குரலிட்டு அல்லோலகல் லோலப்பட்டதையடுத்து செய்வதறியாது குழந்தையுடன் ஆசனத்தில் அமர்ந்திருந்த தாயின் கால் பெருவிரலில் இப்பாம்பு தீண்டியதாகத் தெரிய வருகிறது.
Comments
Post a Comment