கட்டார் பிரதமர் இன்று இலங்கை விஜயம் !
ஜனாதிபதி உட்பட பலருடன் சந்திப்பு –
கட்டார் பிரதமர் ஷெய்க் ஹமாட் அல்தானி தலைமையிலான விஷேட தூதுக் குழு ஒன்று இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வருகின்றது.
பிரதமர். டி.எம்.ஜயரட்ன மற்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கட்டார் தூதுக்குழுவினரை வரவேற்பர்.
இருநாடுகளுக்கு இடையோன நட்புறவை மேலும் வலுப்பெறச் செய்யும் வகையில் இவ் விஜயம் அமையும் என நம்பப்படுகிறது.
இலங்கை வரும் கட்டார் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி மற் றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்ச ர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment