இடமாற்றத்தை கண்டித்துகல்முனையில் கண்டன ஆர்ப்பாட்டம்
கிழக்கு மாகாண சபையினால் ஆசிரியர்களுக்கு வழங்கப் பட்ட இடமாற்றத்தை கண்டித்து இன்று கல்முனையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இடமாற்றம் செயப்பட்டுள்ள ஆசிரிய,ஆசிரியைகளும் அவர்களுடைய சிறு குழந்தை களும் கலந்து கொண்டு கோஷமிட்டனர். எங்கள் குடும்பங்களை பிரிக்காதே ,தாய் ஒருஇடம்,பிள்ளை ஒரு இடம். தந்தை ஒரு இடமா, என்பன போன்ற கோசங்களை எழுபியவர்களாக கல்முனை நூலக முன்றலில் இருந்து கல்முனை வலயக் கல்வி அலுவலகம் வரை எதிர்ப்பு சுலோக அட்டைகளை ஏந்தியவர்களாக ஊர்வலமாக சென்று வலயக் கல்விப் பணிப்பாளருக்கு மகஜர் கய்யளிதனர்.
இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துல்கர் நஹீமும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment