அரச ஊழியர் சம்பள உயர்வு; சுற்று நிருபம் வெளியாகியது
கடந்த மாதம் சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பத்து சதவீத சம்பள உயர்வு தொடர்பான சுற்று நிருபத்தை அரசாங்க நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.
அரச ஊழியர் ஒருவர் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெறும் அடிப் படை மாதாந்த சம்பளத்தில் பத்து சதவீதத்தினை 2012 ஜனவரி மாதம் முதல் விசேட படியாக பெறுவதுடன் இப்படியானது ஓய்வூதியக் கணிப்பீட் டிற்குள் சேர்த்துக் கொள்ளப்படமாட்டா தெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கு இப்படியானது ஜனவரி முதல் ஐந்து சதவீதமும் 2012 ஜூலை மாதம் முதல் மீது ஐந்து சதவீதமும் வழங்கப்படும்.
பதவி நிலை சாராத அனைத்து உத்தியோகத்தர்களுக்கும், பயினுர் பதவிகளில் உள்ள அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் ஜனவரி முதல் பத்து சதவீதம் அதிகரித்த படி வழங்கப்படும்.
இதேவேளை 2003 டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு 2012 ஜனவரி மாதம் ஐநூறு ரூபாவும், 2012 ஜூலை மாதம் ஐநூறு ரூபாவும் விசேட படியாக வழங்கப்படுவதுடன் 2004 ஜனவரி முதலாம் திகதிக்கும், 2005 டிசம்பர் 31ம் திகதிக்குமிடையில் ஓய்வு பெற்றோருக்கு 2012 ஜனவரி மாதம் 250 ரூபாவும், ஜூலை மாதம் 250 ரூபாவும் விசேட படியாக வழங்கப்படுமென அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment