டிசம்பர் 31 வரை உரிமை கோரி விண்ணப்பிக்க முடியும்



விதவைகள், அநாதைகள், தபுதாரர் ஓய்வூதியம்:


பணிப்பாளர் கே.ஏ. திலகரட்ண
விதவைகள், அநாதைகள் மற்றும் தபுதாரர்கள் ஓய்வூதிய சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கமைய உரிமை கோரும் விண்ணப்பங்களை ஓய்வூதிய திணைக்களத்துக்கு சமர்ப்பிக்க வேண்டிய இறுதித் தினம் டிசம்பர் 31 ஆம் திகதி என ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் கே. ஏ. திலகரட்ண அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஓய்வூதிய திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தின்படி பின்வரும் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க முடியும். இந்நிகழ்வுகள் யாவும் 2010 ஆகஸ்ட் 17 ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப் பட்டுள்ளது. அந்த வகையில்
* பயங்கரவாதம், இயற்கை அனர்த்தம் என்பன காரணமாக உயிரிழந்த அரச அலுவல்கள் இறுதியாக பெற்றுக் கொண்ட சம்பாத்திய அடிப்படையில் விதவைகள், அநாதைகள், தபுதாரம் ஓய்வூதியத்தை திருத்தியமைத்து ஓய்வூதியம் வழங்கல்.
* அமைய, தற்காலிக பதவியில் இருந்தோர் பயங்கரவாதம் காரணமாக, இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்திருந்தால் துணைவர்களுக்கு மற்றும் அநாதைப் பிள்ளைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
* 26 வயதிற்கு குறைந்த அநாதைப் பிள்ளைகளுக்கு விவாகத்தை கருத்திற்கொள்ளாது அநாதை ஓய்வூதியம் வழங்கல்.
* பதவி ஒழிக்கப்பட்டதன் காரணமாக ஓய்வுபெறச் செய்யப்பட்ட சலுகைகள் 55 வயது வரை செய்துகொண்ட விவாக அடிப்படையில் விதவை, அநாதை, தபுதாரர் ஓய்வூதிய உரிமையை வழங்கல்.
* நிரந்தர ஓய்வூதிய உரித்துடைய 10 வருடங்களுக்கு மேற்பட்ட சேவைக் காலத்தை பூரணப்படுத்தி இருப்பினும் ஓய்வூதிய உரிமையை இழந்த அலுவலகர்களுக்கு விதவை, அநாதை, தபுதாரர் ஓய்வூதியத்தை வழங்கல்.
* மீள் விவாகம் செய்து கொண்ட விதவைகள், தபுதாரர்களுக்கு விதவை, அநாதை, தபுதாரர் ஓய்வூதியத்தில் ஐம்பது வீதத்தினை வழங்கல் போன்றன குறிப்பிடப்பட்டுள்ளன.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது