கல்முனை மாநகர சபையின்வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கல்முனை மாநகர சபையின் 2012ம் வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அணைவரினதும் ஆதரவுடன் நேற்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கல்முனை மாநகர சபை மாதாந்த பொதுக் கூட்டம் சபா மண்டபத்தில் மாநகர முதல்வர் சிராஸ் மீராசாகிப் தலைமையில் நேற்று நடைபெற்றது.
கல்முனை மாநகர சபை 2012ம் வருடத்தில் எதிர்பார்க்கப்படும் வருமானமாக 17கோடி 43 இலட்சத்து 59 ஆயிரத்து 60 ரூபாவும் எதிர்பார்க்கும் செலவாக 17கோடி 43 இலட்சத்து 42 ஆயிரத்து 788 ரூபாவும் என முதல்வரினால் முன் வைக்கப்பட்டு எதிர்காலத் திட்டம் குறித்து விளக்கினார்.
அரசின் நெல்சிப் திட்டத்தின் மூலம் 4 கோடி 70 இலட்சம் ரூபாவும் பிரமாண அடிப்படையிலான நன்கொடையாக 1இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையாக 10 இலட்சம் ரூபாவும் வருமானமாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து பிரதி முதல்வர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், மாநகரசபை எதிர்கட்சி தலைவர் அமிர்தலிங்கம் உட்பட உறுப்பினர்கள் பலர் உரையாற்றினர்.
உறுப்பினர்களின் வரவு செலவுத் திட்ட விவாதத்தைத் தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பு எதுவுமின்றிஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அணைவரினாலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Comments
Post a Comment