போட்டிப் பரீட்சையின் விடைத்தாளுடன் ரூ.5000 பணம், அதிர்சி அடைந்த உத்தியோகத்தர்


கிழக்கு மாகாண அரசசேவை உதவி
 முகாமையாளர்களுக்கான 
போட்டிப் பரீட்சையின் விடைத்தாள்கள்
 திருத்தும்
 கடமையில் ஈடுபட்டிருந்த உத்தியோஸ்தர்
 விடைத்தாளுடன் 5000 ரூபா 
பணமும்  ஒரு கடிதமும் 
இணைத்திருந்ததணை கண்டு 
அதிர்ச்சியடைந்துள்ளார்.


விடைத்தாள்களை திருத்தும் பணியில்
 ஈடுபட்டிருந்த
 உத்தியோஸ்தர் இது சம்பந்தமாக கிழக்கு 
மாகாண 
அரச சேவைகள் திணைக்களத்திற்கு
 அறிவித்துள்ளார்.


விடைத்தாளுடன் இரண்டு 2000 ருபா
 நோட்டுக்களும்
 ஒரு 1000 ருபா நோட்டும் கடிதமொன்றும் 
ஒரு உறையில்
 போடப்பட்டு விடைத்தாளுடன் 
இணைக்கப்பட்டிருந்தது.
 அக்கடிதத்தில் தான் மிகவும் கஸ்டமான
நிலையில் இருப்பதாகவும் தனது இரண்டு 
காதணிகளை வங்கியொன்றில் ஈடுவைத்த 
பணத்தையே இத்துடன்
 இணைத்துள்ளதாகவும்
 இப்பரீட்சையில்
 எந்தவிதத்திலாவது தன்னை சித்தியடையச்
 செய்தால் எனது வாழ்க்கையில் 
செய்யும் பெரிய 
உதவியாக கருதுவதாகவும் 
தெரிவிக்கப்பட்டிருந்ததாக
 கிழக்கு மாகாண அரச சேவைகள் திணைக்கள 
அதிகாரியொருவர் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்