தேனிலவு வந்த பிரிட்டன் ஜோடிக்கு கட்டுநாயக்கவில் ஆனந்த அதிர்ச்சி!
தேனிலவைக் கொண்டாட வந்து இருந்த பிரித்தானிய தம்பதி ஒன்றுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை அரசினால் அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.
Nehdia Chemby, John Chemby இருவரும் தேனிலவுக்கு உகந்த இடமாக இலங்கையை தெரிவு செய்தனர். கடந்த திங்கட்கிழமை வந்து அடைந்தனர்.
இலங்கைக்கு இவ்வருடம் வந்த 800,000 ஆவது உல்லாசப் பயணி Nehdia ஆவார்.
800000 ஆவது உல்லாசப் பயணியை வரவேற்க சுற்றுலாத் துறை அதிகாரிகள் முன் ஆயத்தங்களுடன் திரண்டு நின்றனர்.
பிரிட்டன் தம்பதிக்கு தடபுடல் வரவேற்பு வழங்கப்பட்டு நினைவுப் பரிசில்கள் கொடுக்கப்பட்டன.
எதிர்பார்த்து இராத மகிழ்ச்சி கலந்த பேரதிர்ச்சி என்றும் இத்தருணத்தை வாழ்க்கையில் ஒருபோதும் மறக்கவே மாட்டார்கள் என்றும் இத்தம்பதி தெரிவித்து உள்ளது.

Comments
Post a Comment