மட்டக்களப்பு மாவட்டஉள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு
மட்டக்களப்பு மாவட்டத்திலுள் எட்டு உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயசிங்க தெரிவித்தார்.
இந்நீடிப்பு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவிற்கு உள்ள அதிகாரத்தின் மூலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிணங்க எதிர்வரும் 2012 மார்ச் 18ஆம் திகதி நிறைவடைவுள்ள, மட்டக்களப்பு மாவட்டத்திலுள் எட்டு உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் 2013 மார்ச் 18ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாநகர சபை, ஏறாவூர் பற்று பிரதேச சபை, கோரளைப்பற்று பிரதேச சபை, கோரளைப்ற்று வடக்கு பிரதேச சபை, மண்முனை தெற்கு எருவில் பற்று பிரதேச சபை, மண்முனைப்பற்று பிரதேச சபை, மண்முனை மேற்கு பிரதேச சபை, மண்முனை தெற்கு பிரதேச சபை மற்றும் போரதீவுபற்று பிரதேச சபை ஆகியவற்றின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment