இந்த செய்தி உண்மையானதா
மருதமுனை கமு/அல்-மனார் மத்திய கல்லூரி பரீட்சை மண்டபத்தினுள் குடைகளை பிடித்துக் கொண்டு க.பொ.த. (சா/த) பரீட்சை எழுதும் மாணவ மாணவிகளைப் படத் தில் காண்க. இந்தப் பிரதேசங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. (படம்: நிந்தவூர் தினகரன் விசேட நிருபர் ரபீக் பிர்தெளவுஸ்)
கல்முனை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் மருதமுனை அல் மானார் மத்திய கல்லூரி கல்வி சமூகத்தில் பேசப் படுகின்ற ஒரு பாடசாலையாகும். கட்டட வசதி வாய்ப்புக்கள் இருந்தும் ஏன் இவ்வாறான நிலை ஏற்ப்பட வேண்டும் . இந்த செய்தி திட்டமிடப்பட்டு செயப்பட்டிருந்தால் கண்டிக்கப் பட வேண்டியதொரு விடயம். பரீட்சை நிலையத்தில் படம் எடுக்க அனுமதித்த அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மருதமுனை கல்வி சமூகம் கேட்டுள்ளனர்.
Comments
Post a Comment