சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை இன்று!
14 மாவட்டங்களை உள்ளடக்கி அதன் கரையோரப் பகுதிகளில் இன்று (20) சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 3 மணி தொடக்கம் 4.30 மணிவரை இந்த சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
கொழும்பு- களுத்துறை- கம்பஹா- திருக்கோணமலை- அம்பாறை- காலி முல்லைத்தீவு- யாழ்ப்பாணம்- கிளிநொச்சி- மன்னார்- புத்தளம்- அம்பாந்தோட்டை- மாத்தறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்ட கரையோர பகுதிகளில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை இடம்பெறவுள்ளது.
இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்களை தெளிவூட்டும் வகையில்
இந்நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இந்த ஒத்திகை நடவடிக்கையால் சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்களில் இருந்து ஒலி எழுப்பப்படும் எனவும் அதனை கேட்டு மக்கள் அச்சமடைய தேவையில்லையெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Comments
Post a Comment