கல்முனை மேயர் முஸ்லிம் காஙகிரஸின் அதியுயர் பீட உறுப்பினராக நியமனம்


கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காஙகிரஸின் அதியுயர் பீட உறுப்பினராக நியமிக்கட்டுள்ளதாக அக்கட்சியின் பொது செயலாளர் எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காஙகிரஸின் யாப்பின் படி உள்ளூராட்சி மன்றமொன்றின் தலைவர் பதவி வழி ரீதியாக கட்சியின் அதியுயர் பீட நியமிக்கப்படுவார். அதனடிப்படையிலேயே கல்முனை மேயர் நியமிக்கப்பட்டுள்ளார் என அவர் குறிப்பிட்டார்.

குறித்த உள்ளூராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து இழக்கப்படும் போது அதியுயர் பீட உறுப்பினர் பதவியிலிருந்தும் இழக்கப்படுவார் என அவர் குறிப்பிட்டார்.

கல்முனை மேயராக பதவி வகித்ததன் மூலம் முஸ்லிம் காஙகிரஸின் அதியுயர் பீட உறுப்பினராக நியமிக்கப்பட்ட முதலாவது மேயர் சிராஸ் மீராசாஹிப் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்