கல்முனை கல்வி வலய ஆசிரியர்கள் திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்
கல்முனை கல்வி வலய ஆசிரியர்கள் இடமாற்றம் கோரி திருகோணமலை கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்திற்கு முன்னால் கொட்டும் மழையில் நனைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கல்முனை வலய மேலதிக ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக கல்முனை வலயத்திலிருந்து அக்கரைப்பற்று சம்மாந்துறை, திருக்கோயில், மட்டக்களப்பு மத்திய ஆகிய வலயங்களுக்கு 134 ஆசிரியர்கள் 2009.06.22 ஆம் திகதி கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், காணி காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சின் செயலாளரின் கடிதத்திற்கு இணங்க இடமாற்றம் செய்யப்பட்டனர்
இவர்கள் வெளி வலயத்தில் ஒரு போதும் கடமையாற்றாதவர்கள்
ஒரே பாடசாலையில் தொடர்ச்சியாக 8 வருடத்திற்கு மேல் கடமை புரிந்தவர்கள்.
53 வயதுக்கு குறைந்தவர்கள் என்ற நியதியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு 2 வருட நிபந்தனை அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
Comments
Post a Comment