கல்முனையில் நாளை நடைபெறவிருந்த பிரார்தனை கூட்டத்துக்கு நீதி மன்ற தடை! பொலிஸ் மா அதிபர் மேல் சீறிப் பாய்கிறார் ஹரீஸ் MP


பேருவளை.அளுத்கம மற்றும் தர்ஹாநகர் தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்தும் , அம்மக்களுக்காக துஆ பிரார்தனையூம் நடாத்துவதற்கும் கல்முனையில் முஸ்லிம் வாழ்வூரிமைக்கான அமைப்பு நாளை (25)ஏற்பாடு செய்த நிகழ்வை நீதி மன்றமூடாக தடைசெய்தமைக்கு பொலிஸ் மா அதிபருக்கு எதிராக கடுமையான கண்டனத்தை திகாமடுள்ள மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்; தெரிவித்துள்ளார்.
இன்று கண்டியில் சர்ச்சைக்குரிய பொதுபல சேனா இயக்கம் அதிஸ்டான பூஜையொன்றை நடாத்த பொலிஸ்மா அதிபர் அனுமதி வழங்கும் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக எமது இஸ்லாமிய முறையிலான துஆ பிரார்த்தனையை புரிவதற்கு தடை விதித்தமை அரச உயர் மட்டங்களின் அளுத்தமே காரணம் எனவூம் நாட்டில் நீதி மரணித்து விட்டதாகவூம் ஹரீஸ் மேலும் தெரிவித்தார் .
வாக்கு வங்கியை திருப்பம் செய்யூம் நோக்கமே இந்த இனவாத செயற்பாடு. இதற்காகவே பொதுபல சேனா இந்த செயற்பாட்டில் இறங்கியூள்ளது.
இது தொடர்பாக பத்திரிகையாளருக்கு விளக்கம் அளிக்கும் செய்தியாளர் மாநாடு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் சாய்ந்தமருது இல்லத்தில் இன்று (24) மாலை இடம் பெற்றது. 



அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கடந்த 15 ஆம் திகதி நடந்தேறிய இனச்சுத்திகரிப்பு  நடவடிக்கையில் நேரடியாக பொது பல சேனா இயக்கம் களத்தில் நின்றது. ஊரடங்குச் சட்டம் முஸ்லிம் மக்களுக்காகவே பிறப்பிக்கப்பட்டன. ஏனையவர்களுக்கு அது விதிவிலக்காக இருந்தது. அந்த வேளை முஸ்லிம்களின் உயிர் பொருள் அத்தனையூம் வெறியாட்டம் ஆடப்பட்டன.  இதற்கு பின்னணியாக அரசாங்கத்தின் உயர் நிலையில் உள்ளவர்கள் காணப்படுகின்றனர். இது எதிர்கால வாக்கு வங்கி தாக்குதலாகவே காணமுடிகின்றது.  இந்த துரதிஸ்டமான சம்பவங்கள் ஏனைய பிரதேச முஸ்லிம்களையூம் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் எமது அழுத்தங்களை பிரயோகிக்க தேவையூள்ளது. முஸ்லிம்களின் வலிமையை வெளிப்படுத்த  அம்பாறை மாவட்டம்தான் மிகப் பொருத்தமானது. ஆதன் அடிப்படையில்தான் கல்முனையில் இந்த துஆ பிரார்தனை நடை பெறவிருந்தது. 
உளவூப் பிரிவினரின் அறிக்கையின் பிரகாரம்  கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகரினால் எமது பிரார்தனை நிகழ்வை தடை செய்யூம் வகையில் நீதி மன்ற தடை உத்தரவூ பெறப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் ஜனாதிபதி வெளியிட்ட கருத்தினை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. முஸ்லிம்களுக்கு எதிராக எவர் அனியாயம் செய்தாலும் தட்டிக் கேட்போம் விடுதலைப் புலிகள் எம்மை தாக்கிய போது எமது தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவரது தலைமையில் பல எதிர்ப்பு போராட்டங்களையூம் இஆர்ப்பாட்டங்களையூம் நடாத்தியூள்ளார் .முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக சிவில் பாது காப்புக் குழுக்களையூம்இ இந்திய படையூடன் இணைந்து சேவையாற்றும் முஸ்லிம் பாதுகாப்புக் குழுக்களையூம் செயற் படுத்தினார். அதே போன்று இன்றய தலைமைத்துவமும் நாமும்  செயலில் இறங்கியூள்ளோம்
எனவே தற்போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் அச்ச சூழலில்  அரசின் நடவடிக்கைகளில் திருப்திகரமில்லை. முஸ்லிம்கள் செறிந்து வாழும்; பிரதேசங்களிலிருந்து  5000 பொலிசாரை பதவிக்கமர்த்தி முஸ்லிம் பிரதேசங்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதற்காக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அளுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது