நான் நாட்டில் இருந்திருந்தால் ஒரு துளி இரத்தம் சிந்தவும் இடமளித்திருக்க மாட்டேன்!

நான் நாட்டில் இருந்திருந்தால் அளுத்கமை, பேருவளைப் பிரதேசங்களில் ஒரு துளி இரத்தம் சிந்தவோ, சொத்துக்கள் அழிக்கப்படவோ இடமளித்திருக்க மாட்டேன் என கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரத்தன கூறினார்.
 
பேருவளை பிரதேச செயலகத்தில் நேற்று (25) இடம்பெற்ற விசேட கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். 
 
இத்தாலி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்பிய அமைச்சர் உடனடியாக வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட அளுத்கமை மற்றும் பேருவளைப் பிரதேசங்களுக்குச் சென்று பாதிக்கப்பட பிரதேசங்களைப் பார்வையிட்டார். 
 
அதன் பின்னர் அப்பிரதேசத்தில் உள்ள சகல சமயத் தலைவர்கள், அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்துகொண்ட விசேட கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.   அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
 
நடைபெற்ற துரதிஷ்ட சம்பவத்தையிட்டு நான் மிகவும் கவலையடைந்துள்ளேன். வன்முறையில் அழிக்கப்பட்ட சொத்துக்களை நாம் மீண்டும் உரியவர்களுக்கு வழங்குவோம்.
அதேவேளை இந்த வன்முறைகள் காரணமாக உடைந்துபோன உள்ளங்களை சீரமைக்க இப்பிரதேச சகல சமயத் தலைவர்களும் முன்வரவேண்டும் என்று ​கோரிக்கை விடுத்தார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி