பொதுபல சேனா இன்று நாட்டின் பாரியதொரு சக்தி


சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்களைப் பற்றிய தவறான கருத்துக்களைப் பரப்பிக்கொண்டு முஸ்லிம்கள் மீது இனவெறித் தாக்குதல்களை மேற்கொண்டுவரும் பொதுபலசேனா என்ற இனவாத அமைப்பினை கண்டிப்பது காலத்தின் தேவையாகும்.
இவ்வாறு கல்முனை மாநகர சபை அமைர்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் தெரிவித்தார்.
கடந்த ஜுன் 15ம் திகதி அளுத்கமதர்கா நகர்பேருவளை மற்றும்  வெலிப்பன்ன உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளபேரினவாத தாக்குதல்களைக் கண்டித்து கல்முனை மாநகர சபையில் முதல்வர் நிஸாம் காரியப்பர் கண்டனத் தீர்மானத்தை சமர்ப்பித்த போது அதனை ஆதரித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது;
கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பொதுபல சேனா என்ற அமைப்பு இன்று நாட்டின் பாரியதொரு இனவெறி சக்தியாக சிங்கள மக்கள் மத்தியில் பரினாமம் பெற்று வருகின்றது.

இவ்வமைப்பின் பிரதான செயற்பாடுகளில் ஒன்றாக சிங்கள மக்களை முஸ்லிம்களுக்கு எதிரான ஆயுதங்களாக பயன்படுத்தி வருகின்றது.
கடந்த ஜுன் 15ம் திகதி அளுத்கமதர்கா நகர்பேருவளை மற்றும்  வெலிப்பன்னபிரதேசங்களின் இடம் பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இதற்கு பெரும் சான்றாக காணப்படுகின்றது.

இவ்வமைப்பினை தடைசெய்ய வேண்டும் அல்லது அதன் செயற்பாட்டினை முடக்க வேண்டும் என்று இந்நாட்டில் வாழும் சிறுபாண்மை மக்கள் மட்டுமல்லாது சிங்கள அமைச்சர்கள், புத்திஜீவிகள், மக்களும் கூட கூறுகின்றார்கள்.

முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இனவெறித்தாக்குதல்களுக்கு எதிராக கண்டணங்களையோ, ஆர்ப்பாட்டங்களையோ, ஹர்த்தால்களையோ செய்ய முடியாத நிலை இன்று முஸ்லிம்கள் பெரும்பாண்மையாக வாழும் கிழக்கில்கூட எழுந்துள்ளது.

முஸ்லிம்களின் உணர்வுகளை சீண்டிப்பார்க்கும் இவ்வாறான வேளையில் முஸ்லிம்கள் செறிவாக காணப்படும் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் நடந்து கொள்ளும் விதம் முழு நாட்டிலும் சிங்கள மக்களோடு மக்களாக வாழும் முஸ்லிம்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.

நாட்டின் தலைவர் என்ற வகையில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அநீதி மற்றும் அவர்களின் இழப்புக்கள் பற்றி எமது தலைமை ஜனாதிபதி அவர்களிடம் ஆவண ரீதியாக முறையிட்டுள்ளது.

இச்சந்தர்ப்பதில் மேற்கொள்ளப்பட்டுவரும் அரசியல்ரீதியான நடவடிக்கைகளின் பெறுபேறுகள் உடனடியாக விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்காது என நினைக்கின்றேன்.

எனவே, இவ்வாறான சூழ்நிலையில் எம்மால் இயன்றளவு பொறுமையாக இருந்து சந்தர்ப்பம் பார்த்து சமயோசிதமான முடிவுகளை எடுப்பதன் மூலம் எமது சமூகத்திற்கு நன்மை கிட்டுமாயின் அவ்வாறானதொரு பொறுமைகாப்பதற்காக நாம் வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது